புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப பொருளாதாரம், சமூகம், கலாசாரம் போன்ற பல்வேறு கருப்பொருளை மையமாக வைத்து வெளியிடப்படுகின்ற நாணயங்கள் நீண்டகாலம் புழக்கத்தில் இருக்கும் என்பதுடன் பல புதிய வடிவங்களிலும் புதிய உருவங்களிலும் வெளியிடப்படும்.
இதில் நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்ட நாணயங்களின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதனால் சில வியாபாரிகள், பொதுமக்கள் அந்த குறிப்பிட்ட நாணயங்களை வாங்க மறுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது
பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும் எனத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் நாணயங்களை மாற்றுவதற்கு வரும் பொதுமக்களை திருப்பி அனுப்ப வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. #புழக்கத்தில் # நாணயங்களும் #செல்லுபடியாகும் #ரிசர்வ் வங்கி