2 குழந்தைகளுக்கு (உயிருடன் உள்ள) மேல் பெற்றவர்கள் உத்தரகாண்ட் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற புதிய மசோதா நிறைவேறியுள்ளது. பா.ஜனதா ஆளும் உத்தரகாண்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு இந்த புதிய மசோதா மாநில சட்டசபையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்றையதினம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உத்தரகாண்ட் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுடன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியையும் இந்த மசோதா வரையறுத்து உள்ளது. அதன்படி தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் எனவும் தலித் பிரிவு ஆண்கள்8-ம் வகுப்பும் தலித் பிரிவு பெண்கள் 5-ம் வகுப்பு முடித்திக்க வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. #குழந்தைகளுக்கு #தேர்தலில் #போட்டியிட தடை#உத்தரகாண்ட்