சமய மற்றும் இன முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக நாட்டில் நடை பெற்றது முறையில் உள்ள சட்டத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கோருவதுடன் மக்கள் மத்தியில் வெளிப்படையான கலந்துரையாடலை மேற்கொள்ளும் நிகழ்வும் இன்று வியாழக்கிழமை (27) இடம் பெற்றது.
தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் தொடர்பாடலுக்கான அமையத்தின் ஒழுங்கமைப்பில் எம்.உவைஸ் தலைமையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மத தலைவர்களுக்கும் மதம் சார்ந்த பிரதி நிதிளுக்குமான பொது கலந்துரையாடல் நிகழ்வானது இன்று காலை 10 மணியளவில் மன்னார் பொது நூலக வளாகத்தில் இடம் பெற்றது.
குறித்த ஒன்று கூடலில் நாடளாவிய ரீதியில் காணப்படும் இன மத முரண்பாடுகளுக்கான காரணங்களை எவ்வாறு குறைக்களாம் என்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதே நேரத்தில் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற சட்ட முறைகள் தொடர்பாகவும் ஒவ்வொரு நபர்களும் அவ் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டிய முக்கியத்துவம் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் சகவாழ்விற்கு தடையாக உள்ள கருத்துக்களை தோற்கடிப்போம் நிராகரிப்போம் என எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் சுவரொட்டிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் பொது இடங்களில் காட்சி படுத்தும் வகையில் ஒட்டப்பட்டமையும் குறிப்பிடதக்கது. #இன முரண்பாடுகள் #சர்வமத பிரதி நிதிகள் #கலந்துரையாடல் #தேசிய சமாதான பேரவை