உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சியை அணிய இலங்கை அணிக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்ற இந்தியா, இங்கிலாந்து. இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நீலநிற ஜெர்சி அணிந்து விளையாடி வருகின்றன.
ஐசிசி-யின் புதிய விதிமுறைப்படி இந்த நான்கு அணிகளும் ஒன்றுடன் ஒன்று விளையாடும் போது ரசிகர்கள் வீரர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்வதற்காக ஜெர்சியை மாற்றிக் கொள்ள வேண்டும். போட்டியை இங்கிலாந்து நடத்துவதால் அந்த அணிக்கு விதிவிலக்னளிக்கப்பட்டுள்ளதனால் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஜெர்சியை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளன.
அந்த வகையில் இலங்கைஅணி மஞ்சள் நிற ஜெர்சியுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்திரான போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருந்தது.இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றதால் மஞ்சள் நிறம் ராசி என கருதுகின்ற இலங்கை அணி அதே ஜெர்சியை தொடரில் மீதமுள்ள போட்டிகளின்போதும் அணிந்து விளையாட ஐசிசி-யிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் தற்போது ஐசிசி அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அணி தென்னாபிரிக்கா, மேற்கிந்தியதிவுகள் மற்றும் இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளதுடன் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #உலகக்கிண்ண #கிரிக்கெட் #மஞ்சள் #ஜெர்சி #இலங்கை #ஐசிசி