நான்கு வயது பெண் குழந்தை ஒன்றை பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தன் நான்கு வயது குழந்தையை காணவில்லை என நேற்றிரவு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண்ணின் வீட்டில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் வீட்டு கழிப்பறையில் கோணிப்பையில், குழந்தை கொலை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்ததனை கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகே வசிக்கும் 60 வயதான முன்னாள் ராணுவ வீரரான மீனாட்சி சுந்தரம் என்பவர் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து கொன்று, உடலை கோணிப்பையில் அடைத்து, கழிப்பறையில் வீசியது தெரிய வந்தது. இதனையடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்த காவல்துநைறயினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #திருமுல்லைவாயல் #பாலியல்வன்புணர்வு