229
உயிர்த்தஞாயிறுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை மையமாகக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக கருதுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.
தற்கொலை தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை கவலைக்குரியது என்றும் தற்போது நாடு பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகையதொரு நிலையில், முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்த ஹக்கீம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட குழுவை முஸ்லிம் பயங்கரவாதிகள் என ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் பெரும் துயர் மிக்கதாக அமையப்பெற்றிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஒருமித்த கொள்கையொன்றை உருவாக்க வேண்டுமானால் மீண்டும் இன, மத ரீதியான அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் மேலும் தெரிவித்தார். #முஸ்லிம் #பயங்கரவாதிகளாக #ஏற்றுக்கொள்ள #உயிர்த்தஞாயிறு #ரவூப் ஹகீம்
Spread the love