200
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன், கடந்த ஒக்டோபர் மாதம் ஆட்சிக் கவிழ்ப்பில் இணைய மறுத்தமைக்காகவே தான் பழிவாங்கப்படுவதாகவும் தனக்கும் சஹ்ரானுக்கும் தொடர்பு இருப்பதாக காட்ட முயல்வதாகவும் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் அரசியல் புரட்சியில் ராஜபக்ஸ அணியில் இணைந்துகொள்ள தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டதற்கு மறுத்தமைக்கே இவ்வாறு பழிவாங்கப்படுவதாகவும் தனது குடும்பத்தினர் பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபடவில்லை என்றும் தான் சஹரானை பார்த்தது கூட இல்லை என்றும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் றிசாத் பதியுதீன் இவற்றைக் குறிப்பிட்டார். தெரிவுக்குழு அமைக்க வேண்டும் என தாம் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக கூறிய அவர், தம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்கவே இதனை வலியுறுத்தியதாகவும் கூறினார்.
அத்துடன் ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட சஹரானை வாழ்கையில் எப்போதும் பார்த்ததில்லை என்றும் இந்த தாக்குதல் இடம்பெற்று ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்தின் மூலமாகவே சஹரானை முதலில் பார்த்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும் சாட்சியமளித்த றிசாத்,
இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நானும் உள்ளேன். இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் நானும் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் கர்தினாலை சந்தித்து இது குறித்த வருத்தத்தை தெரிவித்தோம்.
இந்த பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட அனைவரையும் தண்டிக்க எம்மாலான சகல உதவிகளையும் வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தேன்.அன்றில் இருந்து இப்போது வரியில் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்க வருகின்றோம். அதுமட்டும் அல்ல எமது மதத் தலைவருடன் இணைந்து நாம் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டில் கருத்தொன்றை முன்வைத்தோம்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்ட எவரதும் உடல்களை எமது மயானனளில் அடக்கம் செய்ய அனுமத்திக்க மாட்டோம் என்றும் நாம் கூறினோம். இது எதிர்கால இளைஞர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கூறினோம். இந்த பயங்கரவாதிகள் இஸ்லாம் என்ற பெயரை வைத்துக்கொண்டு பயங்கரவவாதத்தில் ஈடுபடலாம்.
ஆனால் இவர்கள் எவரும் முஸ்லிம்கள் அல்ல. தற்கொலை தாக்குதல் செய்யவோ ஏனைய இனத்தவரை கொலைசெய்யவோ இஸ்லாம் கூறவில்லை என்றும் அவர் தனது சாட்சியத்தில் மேலும் கூறினார். #மகிந்த ராஜபக்ஸ #பழிவாங்க #சஹ்ரான் #தெரிவுக்குழு #றிசாத்
Spread the love