சஜித் பிரேமதாசா வேட்பாளராகக் களமிறங்குவதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பினாலும் அவர் ஜனாதிபதியாவதை மக்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதற்கு சில முக்கிய தகுதிகள் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால் அதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை புலம் பெயர் தமிழர்களின திட்டமிட்ட சதிச் செயல் என்று தெரிவித்த எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச இவ்விடயம் கோதாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்விதத்தில் தடையாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுனவில் இருந்தே வேட்பாளர் நியமிக்கப்படுவார் என்றும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடிய பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் இன்னும் கலந்துரையாடல்களே இடம்பெற்று வருவதாகவும் இந்த விடயம் குறித்தும் ஆராய்ந்த பின்னரே வேட்பாளர் நியமனம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.# சஜித்பிரேமதாசா #மகிந்தராஜபக்ச #கோத்தபாயராஜபக்ச