Home இலங்கை ஷாபிக்கு எதிராக அத்துரலியே தேரர் முறைப்பாடு – குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை கோரியுள்ளது

ஷாபிக்கு எதிராக அத்துரலியே தேரர் முறைப்பாடு – குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை கோரியுள்ளது

by admin


குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் செய்கு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக அத்துரலியே ரத்தன தேரர் செய்துள்ள முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து; குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை கோரியுள்ளது

வைத்தியர் ஷாபி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை உரிய வகையில் இடம்பெறவில்லை என அத்துரலிய ரத்தன தேரர்; பதில் காவல்துறைமா அதிபர் சி.டி விக்ரமரட்னவிடம முறைப்பாடொன்றை நேற்று முதுன்தினம் சமர்ப்பித்திருந்தார் என காவல்துறை ஊடகப் பேச்சாளரும், காவல்துறை அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலான அறிக்கையொன்றையே அனுப்பி வைக்குமாறு பதில் காவல்துறை மா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபருக்கு நேற்றையதினம் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படும் விடயங்களுக்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். #ஷாபி #அத்துரலியே தேரர் #முறைப்பாடு #குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ,

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More