170
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு நடைபெற்று வந்த நிலையில் , மாநாட்டு மண்டபத்திற்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது கட்சியின் தேசிய மாநாட்டை குழப்புவதற்காக காணாமல் போனவர்களின் உறவுகள் சம்பவ இடத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டம் நடைபெறும் மண்டபத்தை சுற்றி நெருங்காமல் கடும் பாதுகாப்பு போடப்பட்டது. எனினும் காணாமல் போன உறவுகளை தேடி போராட்டம் நடத்தி வரும் உறவுகள் மண்டபத்தின் முன்பாக போராட்டம் வருகை தந்ததுடன் பல்வேறு கோசங்களை எழுப்பி தமிழ் தேசிய தலைமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளின் நிலைமை தொடர்பில் வெளிப்படுத்துமாறு கோரி கோசங்களை எழுப்பினார்கள். வெளியே மதிய வெயிலுக்குள் நின்று மக்கள் போராடிய போதிலும் மண்டபத்தினுள் மாநாடு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சிறிது நேரம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #காணாமல் ஆக்கப்பட்டவர்களின் #உறவினர்களினால் #யாழில் #போராட்டம்
Spread the love