கைது செய்யப்பட்ட காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, அவர்கள் தங்கியிருந்த வைத்தியசாலைகளுக்கு சென்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கொலைக்குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டு தொடர்பான சந்தேக நபர்களாகக் கருதி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபரினால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையினால் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை இதனை அடுத்து இருவரும் வைத்தியசாலைகளில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #பூஜித்ஜயசுந்தர #ஹேமசிறிபெர்னாண்டோ