ஆனமடுவ- சிலாபம் வீதியின் பள்ளம சேருகெலே பிரதேசத்தில் இன்று (3.07.19) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்து, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வானொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஐவருள் இருவர் பலத்த காயமடைந்துள்ளதால், அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் யாழப்பாணத்தைச் சேர்ந்தவர்களென்றும் கனடாவிலிருந்து வருகைத் தந்த தமது உறவினரொருவரை வரவேற்பதற்காக, இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு வந்தப் போதே, இவ்வாறு விபத்து இடம்பெற்றுள்ளது. #ஆனமடுவ #சிலாபம் #வாகனவிபத்து
விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம்…
174
Spread the love