லிபிய தலைநகர் திரிபோலி அருகே உள்ள தஜோரா என்ற இடத்தில் உள்ள புலம்பெயர்வோர் மையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபிரிக்க மற்றும் அரபு நாடுகளில் இருந்து முறையான ஆவணமின்றி குடியேற, கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் முக்கிய இடமாக லிபியா உள்ள நிலையில் அத்தகையோரை தங்க வைக்கும் தஜோரா பகுதியில் அமைந்துள்ள புலம்பெயர்வோர் மையம் மீதே இவ்வாறு வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வான்வழித் தாக்குதலில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர்களை மருத்துவனையில் அனுமதித்துள்ளதாகவும் தெமரிவித்துள்ளனர். இந்த வான்வழித் தாக்குதலை கலீபா ஹிப்டர் தலைமையிலான லிபிய தேசிய ராணுவம் நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
லிபிய புலம்பெயர்வோர் மையத்தின் மீதான வான்வழித் தாக்குதலில் 40 பேர் பலி…
141
Spread the love