ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி பதவிக்கு முதல்தடவையாக பெண்ணொருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய 5 தலைமைப் பதவிகளுக்கு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் ஜேர்மன் நாட்டு பாதுகாப்பு அமைச்சரான உர்சுலா வொன்டர் லெயன் இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரியான கிறிஸ்டின் லகார்ட், ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கியின் தலைமை அதிகாரி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கும் பெண்ணொருவர் பரிந்துரைந்துரைக்கப்பட்டுள்ளமை இது முதற்தடைவ என்பது குறிப்பிடத்தக்கது பெல்ஜியத்தின் இடைக்கால பிரதமர் சார்ள்ஸ் மிட்ஷல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவிக்கு முதல்தடவையாக பெண் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்..
161
Spread the love