வழக்கத்திற்கு மாறாக கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை எனவும் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று சுமார் 60 முதல் 75 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசி வருவதன் காரணமாக பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கான மீன் பிடி அனுமதியை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாததால் 5,000-க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் 10,000-க்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் லட்சக்கணக்கிலான வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.