231
பங்களாதேஸ் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஷகிப் அல் ஹசன் உலகக்கிண்ணத் தொடரில் 500 ஓட்டங்களுடன் 10 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான போட்டியின் போது 66 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் 542 ஓட்டங்களை எடுத்த ஷகிப் 11 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இவ்வாறு புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு நியூசிலாந்து வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணப் போட்டியில் 449 ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியது சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது #Shakib-Al-Hasan #ஷகிப் அல் ஹசன் #சாதனை #பங்களாதேஸ்
Spread the love