மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்ற அம்மாநில அரசின் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டுமானால், அரசியல் சாசனத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதோடு, பல காரணிகளையும் கருத்தில் கொண்டே அதனை செய்ய முடியும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றும் கோரிக்கை நிராகரிப்பு #மேற்கு வங்க மாநிலம் #பங்களா #பெயர் #கோரிக்கை #நிராகரிப்பு