ரஸ்ய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த நீர்மூழ்கி கப்பல் ஆழ்கடல் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்காக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உள்பட 14 பேருடன் பயணம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து காரணமாக நச்சு வாயு கப்பல் முழுவதும் பரவியதனால் அந்த நச்சு வாயுவை சுவாசித்த 14 பேரும் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி விபத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு பாதுகாப்பு துறை அமைச்சுக்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். #ரஸ்ய #நீர்மூழ்கி கப்பல் #தீவிபத்து