முல்லைத்தீவு மாவடடத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கேப்பாப்புலவு இராணுவ படை பிரிவின் அருகாமையில் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குண்டு வெடிப்பு சத்தம் கேப்பாப்புலவு, முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. நந்திக்கடல் களப்பு பகுதியில் தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து அங்கு தீ வைத்த வேளையிலே அதில் இருந்தே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. குறித்த இடத்தில் காவற்துறையின் விசேட அதிரடிப்படையினர், இராணுவம் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.#முல்லைத்தீவு #கேப்பாப்புலவு #முள்ளிவாய்க்கால் #இரட்டைவாய்க்கால்
நந்திக்கடல் பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்தது…
181
Spread the love