169
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் தென்னாபிரிக்காவின் 4-ம் நிலை வீரரான கெவின் அன்டர்சன் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான 3-வது சுற்று போட்டி ஒன்றில் கெவின் அன்டர்சன் 26-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் குய்டோ பெல்லாவை எதிர்கொண்டிருந்தார்.
போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிய அன்டர்சன் 6-4, 6-3 7(7)-6(4) என கைப்பற்றி பெல்லா 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். #விம்பிள்டன் டென்னிஸ் #கெவின் அன்டர்சன் #தோல்வி
Spread the love