158
ஜனாதிபதித் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரச அதிகாரிகளுக்கான பயிற்சிகளை அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முதலில் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்த போதிலும், பல்வேறு காரணங்களால் அந்தத் தேர்தல் தாமதமடைவதாகத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்திற்குள் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. #ஜனாதிபதித்தேர்தல் #தேர்தல்கள்ஆணைக்குழு #மாகாணசபைத்தேர்தல்
Spread the love