Home பிரதான செய்திகள் விம்பிள்டன் டென்னிஸ் – நடால் – பெடரர் – நிஷிகோரி 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் – நடால் – பெடரர் – நிஷிகோரி 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

by admin

லண்டனில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் , ரோஜர் பெடரர் மற்றும் நிஷிகோரி ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்றுப் போட்டி ஒன்றில் 2 முறை விம்பிள்டன் கிண்ணத்தினைக் கைப்பற்றியவரும் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் நாட்டு; வீரர் ரபெல் நடால் 6-2, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் சோங்காவை வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூகாஸ் பவுல்லியை 7-5, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதேபோல், ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-4, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  #விம்பிள்டன்  #நடால் #பெடரர் #நிஷிகோரி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More