உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடையேயான அணு ஒப்பந்தத்தை பாதுகாப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க பிரான்சும் ஈரானும் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் அணு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதனையடுத்து பல குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது.இந்தநிலையில் இந்த ஒப்பந்தத்தினை கைவிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோங், ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானியிடம் தொலைபேசியில் உரையாடும் போது கவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஈரானின் அணு திட்டத்தை முடக்கும் வகையில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை பாதுகாக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு ருஹானி அழைப்பு விடுத்துள்ளார்.
அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் உற்பத்தியை ஈரான் குறைத்துக்கொண்டால், ஈரான் மீதான தடைகளை நீக்க அந்த ஒப்பந்தம் வழிவகை செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. #அணு ஒப்பந்தத்தை #பாதுகாப்பது #பேச்சுவார்த்தை #பிரான்ஸ் #ஈரான் #ஒப்புதல்