சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறித்து விரைவானதும், வெளிப்படையானதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுத்தி மியன்மாரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பாலர் பாடசாலையொன்றில் வைத்து சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில், சிறுமியின் பெற்றோரினால் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, ஒரு மாதம் கடந்துள்ள போதிலும், விடயத்தைக் கையாளும் காவல்துறையினர் வேகம் மற்றும் தொழிற்திறன் குறித்து பலத்த் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையிலேயே குறித்த சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு விரைவானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததும் வெளிப்படையானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை இந்த வாரம் கைது செய்துள்ளதாக மியன்மார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #பாலியல்துஷ்பிரயோகம் #மியன்மார்