கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் காணாமல் போன சமூக ஆர்வலர் முகிலன், நேற்று ஜூலை 6 ஆம் திகதி திருப்பதி புகையிரத நிலையத்தில் தாடி மீசையோடு காவல்துறையினரின் பிடியில் இருந்ததாக அவரது நண்பர் சண்முகம் என்பவர் தகவல் தெரிவித்துள்ளார்.
முகிலனின் சிறுவயது நண்பரான சண்முகம் திருப்பதி புகையிரத நிலையத்தில் காவல்துறையினரின் பிடியில் முகிலன் இருந்ததைப் பார்த்துள்ளதனையடுத்தே இவர் தகவலினை வெளியிட்டுள்ளார்.
முகிலன் திருப்பதியில் இருக்கும் தகவல் பரவியதும் நேற்று இரவே தமிழக காவல்துறையினர் அவரை திருப்பதி சென்று அங்கிருந்து காட்பாடிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை நேற்று இரவே சென்னைக்கும் அழைத்து சென்ற அவர்கள் சென்னை காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் காவற்துறையினர் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இதேவேளை சமூக ஆர்வளர் முகிலனை கூடிய விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என மனித உரிமை ஆர்வளர் ஹென்றி டிபேன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து ஹென்றி டிபேன் இன்று கருத்து தெரிவிக்கையில், முகிலன் இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், முகிலன் தொடர்பாக தகவல் தெரிவித்த சண்முகத்திற்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடள் காவற்துறையினர் பொறுப்புடன் செயற்பட்டு விரைவிலேயே முகிலனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானது தொடர்பாக புலனாய்வு செய்து ஒரு காணொளியை தயாரித்து யூடியூபில் வெளியிட்ட பின்னர் முகிலன் காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.