பிரித்தானியாவில் போரிஸ் ஜோன்சன் வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் நடவடிக்கையை வெற்றிகரமாக செய்து முடிக்காத நிலையில் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்திருந்தாhர்
இதனால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்கின்ற நிலையில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜோன்சனுக்கும், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவரை அதாவது புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கு 22ம் திகதிவரை வரை அவகாசம் வஙை;கப்பட்டுள்ளது.
23-ந் திகதி வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்பட்டு விடும். இந்த நிலையில் ‘டைம்ஸ்’ நாளிதழ் சார்பில் கன்சர்வேடிவ் கட்சியினர் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் போரிஸ் ஜோன்சனுக்கு 74 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போரிஸ் ஜோன்சன் வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.