வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் யாழ் நாவலர் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்தின்கீழ் செயற்பட்டுவரும் மக்கள் பிரதிநிதிகள் தமது பிரதேச மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் செயற்படவேண்டுமென்று கேட்டுக்கொண்ட கௌரவ ஆளுநர், அதை நோக்காக முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு பிரதேச சபைகளின் ஊடாக உதவி புரிவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் பிரதேச சபைகளின் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
Spread the love
Add Comment