அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 200 அகதிகளை மெக்சிகோ அரசு தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர்.அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இதனிடையே அகதிகள் ஊடுருவுவதைத் தடுக்க மெக்சிகோ-அமெரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானதனையடுத்து அகதிகள் ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்சிகோ உறுதி வழங்கியிருந்தது. இந்தவகையில் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 228 அகதிகளை மெக்சிகோ அரசு தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது.
சரக்கு பாரவூர்தி ஒன்றினை சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களை சட்டவிரோதமாக வாகனத்தில் ஏற்றிச் சென்ற இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட அனைவரும் குவாத்தமாலா, ஹண்டுராஸ் மற்றும் எல் சால்வடோர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. #அமெரிக்கா #அகதிகள் #மெக்சிகோ #கைது