வெனிசூலாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் அரசியல் பதற்றநிலைமையைத் தணிப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி நிகலோஸ் மடுரோவுடன் பேச்சுவார்த்தை ஈடுபடுவதற்குத் தயார் என அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. இதனை தன்னைத் தானே அந்நாட்டின் ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் கெய்டோ தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தை பார்படோஸில் இடம்பெறவுள்ளதுடன் பேச்சுவார்த்தைக்கு நோர்வே மத்தியஸ்தம் வகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் பேச்சுவார்த்தை இடம்பெறும் தினம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இNதுவேளை கெய்டோவின் இந்த அறிவிப்பு தொடர்பில் ஜனாதிபதி மடுரோ தரப்பிலிருந்து இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
வெனிசூலாவில் தொடரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை அடுத்து, அங்கிருந்து 4 மில்லியன் பொதுமக்கள் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அத்துடன் ஜூவான் கெய்டோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. #வெனிசூலா #ஜனாதிபதி #பேச்சுவார்த்தை #எதிர்க்கட்சி #நிகலோஸ் மடுரோ #ஜூவான் கெய்டோ