குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 19ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டார். எவன் கார்ட் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்களை கைது செய்வதற்கு அண்மையில் சட்டமா அதிபர் பதில் காவற்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்…
145
Spread the love
previous post