பிரித்தானிய பிரதமரையும் பிரித்தானியாவையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவமதித்துள்ளதாக, பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெரமி ஹன்ட் குற்றம் சுமத்தியுள்ளார். பிரதமர் தெரேசா மே பிரெக்ஸிட் விவகாரத்தை சரியாகக் கையாளவில்லை எனவும் புதிய பிரதமர் கிடைக்கவுள்ளமை பிரித்தானியாவுக்கு ஒரு நல்ல செய்தி எனவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவர் கிம் டரச் , ட்ரம்பின் நிர்வாகம் திறமையற்ற ஒன்று என விமர்சனம் செய்ததை அடுத்து அவர் குறித்தும் பிரித்தானிய பிரதமர் குறித்தும் ட்ரம்ப் இவ்வாறான கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #பிரித்தானியா #ட்ரம்ப் #அவமதித்துள்ளதாக #குற்றச்சாட்டு #தெரேசா மே