கட்டார் தலைநகர் டோஹாவில் ஆப்கானிஸ்தானும், தலீபான்களும் நேரடியாக நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் இரு தரப்பும் வன்முறையை குறைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நடைபெறும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பிய அமெரிக்கா அதற்காக தலீபான் அமைப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தையில ஈடுபட்டிருந்தது. அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தலீபான் அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஆப்கானிஸ்தானில் செல்வாக்கு பெற்றவர்களின் குழு டோஹாவில் 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் இரு தரப்பும் வெளியிட்ட கூட்டறிக்கையில் ஆப்கானிஸ்தானில் சமரசத்தை ஏற்படுத்தவும், வன்முறையை குறைத்துக்கொள்ளவும் இரு தரப்பும் உறுதி எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பும் உறுதி கொண்டுள்ள போதும் அங்கு தாக்குதல்கள் நீடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது #ஆப்கானிஸ்தான் #தலீபான்கள் #பேச்சுவார்த்தை #நிறைவு