லண்டனில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இன்று நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், 20 தடவைகள் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரொஜர் பெடரரும் 18 தடவைகள் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடாலும் இன்று போட்டியிடவுள்ளனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற காலிறுதிப் போட்டிகயில் ஜப்பானின் கீ நிஷிகோரியை 4-6 ,6-1, 6-4 எனற் செட் கணக்கில் வென்று சுவிற்ஸர்லாந்தின் பெடரர் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். அதேவேளை ஐக்கிய அமெரிக்காவின் சாம் குவாரேயை 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று ஸ்பெய்னின் நடால் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.
அந்தவகையில், 2006, 2007, 2008ஆம் ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டிகளில் போட்டியிட்டதன் பின்னர் தற்போது முதற்தடவையாக பெடரரும், நடாலும் போட்டியிடவுள்ளனர். மொத்தமாக 39 தடவைகள் நடாலும், பெடரரும் இதுவரை போட்டியிட்டிருந்த நிலையில் 24 தடவைகள் நடால் வென்றுள்ளதுடன் 15 தடவைகள் பெடரர் வென்றுள்ளார்.
அத்துடன் இன்று இடம்பெறவுள்ள மற்றைய அரையிறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட்டை, நடப்புச் சம்பியன் நொவக் ஜோக்கோவிச் எதிர்கொள்ளவுள்ளார்.
இதேவேளை போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவுப் போட்டியில் செக்குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவை 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் இறுதிப் போட்டியில் சிமோனா ஹாலெப்பை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #விம்பிள்டன் #டென்னிஸ் #பெடரர் #நடால் #அரையிறுதி,