உலகம் பிரதான செய்திகள்

கிரீன் கார்ட் வழங்குவதற்கான உச்சவரம்பை அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்


கிரீன் கார்ட் வழங்குவதற்கு உள்ள 7 சதவீத உச்சவரம்பை 15 சதவீதமாக உயர்த்துவதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணி புரிய விரும்பும் வெளிநாட்டவருக்கு 3 வருட காலம் தங்கி வேலை செய்ய வழிவகுப்பதுடன் அதற்காக எச்-1பி எனப்படும் விசா வழங்கப்படுகின்றது. இந்த விசா மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கத்தக்கது.

இந்த எச்-1பி விசாதாரர்களில் மிகவும் திறமையும், தகுதியும் வாய்ந்த 7 சதவீதம் பேருக்கு நிரந்தரமாக தங்கி வேலை செய்ய வசதியாக கிரீன் கார்ட் வழங்கப்படுகின்றது. எனினும் விண்ணப்ப சிரேஸ்டத்துவ அடிப்படையில் வழங்கப்படுவதனால் கிரீன் கார்ட்டுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் கிரீன் கார்ட் வழங்குவதற்கு உள்ள 7 சதவீத உச்சவரம்பை நீக்கி, 15 சதவீதமாக உயர்த்துவதற் அமெரிக்க பாராhளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது நேற்று முன்தினம் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் ; மசோதாவுக்கு ஆதரவாக 365 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளுமே வழங்கப்பட்டிருந்த நிலையில் மசோதா நிறைவேறியுள்ளது

இந்த மசோதா அடுத்து செனட் சபையில் நிறைவேறிய பின்னர் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்ட பின்னர் சட்டமாகி நடைமுறைக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. #அமெரிக்கா #கிரீன் கார்ட்  #மசோதா #நிறைவேற்றம்  #எச்-1பி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.