அல் கய்தாவின் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் காட்டத் தேவையில்லை என இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த அல் கய்தா அமைப்பின் தலைவர் இந்திய ராணுவத்தின் மீதும் அரசின் மீதும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்ள காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்கள் முழு மனதோடு கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
காஷ்மீர் விவகாரம் முழு உலகிலும் வாழும் இஸ்லாமிய சமூக ஜிஹாதின் ஓர் அங்கமாகும் எனவும் ஜிஹாதை ஆதரிப்பது அனைத்து இஸ்லாமியர்களின் தனிப்பட்ட கடமை என்பதை அறிஞர்கள் வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அல் கய்தாவின் இந்த எச்சரிக்கை தொடர்பாக விளக்கமளித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் இதுபோல தினமும் நமக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் வருகின்றன. அவற்றுக்கெல்லாம் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியப் பாதுகாப்புப் படைகள் போதிய பலத்துடன் இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். #அல் கய்தா #அச்சுறுத்தல்களுக்கு #முக்கியத்துவம்