தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் சுமார் 1,500 கோடி ரூபா செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சுமார் 2 கிமீ தூரத்துக்குச் சுரங்கம் அமைத்து இந்த ஆய்வகம் அமைக்கப்படவு நிலையில் இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என தேனி சுற்றுவட்டாரப் பகுதியினரும் அரசியல் கட்சிகளும் சூழலியல் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடிவருகின்றன.
அத்துடன்நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பிலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி ஒன்று பதிலளித்த போது நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் மலையில் 2 கிமீ நீளத்துக்குச் சுரங்கம் அமைத்து 51,000 தொன் இரும்பு கலோரிமீட்டர் கருவி மூலமாக நியூட்ரினோவைக் கண்டறிவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்
இந்தத் திட்டம் அந்தப் பகுதியிலுள்ள சுற்றுப்புறச் சுழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இதனையடுத்து நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கத் தமிழகச் சூழலியல் அமைப்புகள் தயராகிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #நியூட்ரினோ #ஆய்வு மையம் #மத்திய அரசு #ஒப்புதல்