பயனாளர்களின் இரகசிய தகவல்களை சட்டவிரோதமாக திருடியமைக்காக சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தக நிறுவனத்திற்கு 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய வலைத்தளமாக கருதப்படுகின்ற முகப்புத்தகம்; பயனாளர்களின் இரகசிய தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்துக்கு திருடிக் கொடுத்தமைக்காகவே இவ்வாறு அந்நிறுவனத்திற்கு 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சமூகவலைத்தளங்களில், தொழிநுட்ப நிறுவனம் என்ற அடிப்படையில் பாரிய தொகை அபாரதம் செலுத்தவுள்ளமை இதுவே முதல் தடைவ என்பது குறிப்பிடத்தக்கது. #முகப்புத்தக #பில்லியன் #டொலர்கள் #அபராதம் #கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா