லண்டனில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸில் முதன்முறையாக சம்பியன் கிண்ணத்தினை ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் கைப்பற்றியுள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்ட சிமோனா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று முதன்முறையாக விம்பிள்டன் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.
இன்றுடன் நிறைவடையவுள்ள இந்தத் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில், ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் ஆகியோர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. #விம்பிள்டன் #சிமோனா ஹாலெப் #செரீனா வில்லியம்ஸை