பிரதான செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ தொடரின் ; ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.  நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் செட்டை ஜோகோவிச் 7(7)-6(5) எனக் கைப்பற்றியிருந்த நிலையில் 2-வது செட்டை பெடரர் 6-1 என கைப்பற்றியிருந்தார்.

3-வது செட்டை ஜோகோவிச் 7(7)-6(4) எனக் கைப்பற்றியதுடன் 4-வது செட்டை 6-4 என ; பெடரர் கைப்பற்றினார். இதனால் நான்கு செட்களில் இருவரும் தலா இரண்டில் வெற்றி பெற்றதால் 2-2 என சமநிலைப் பெற்றனர். இதனையடுத்து சம்பியனை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் போட்டியிட்ட நிலையில் பெடரர் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். #விம்பிள்டன் #டென்னிஸ் #ஜோகோவிச் #சம்பியன் #Djokovic

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.