தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. நிலவின் தென்துருவ மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 ஏவப்படுகிறது. இதுவரையில் நிலவின் தென்துருவ மண்டலத்தில் எந்த நாடுமே தடம் பதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இன்று அதிகாலை சந்திரயானை விண்ணில் ஏவ அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் திடீரென சில தொழில்நுட்பக் கோளாறுகளை இஸ்ரோ கண்டறிந்தனைத் தொடர்ந்து, குறித்த நேரத்தில் விண்கலனை ஏவ இயலாது என தெரிவித்துள்ள இஸ்ரோ எப்போது விண்கலன் ஏவப்படும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது
எரிபொருள் நிரப்பப்பட்டபோது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது எனவும் ரொக்கெட் முழுமையாக ஆய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #தொழில்நுட்பக் கோளாறு #சந்திரயான் 2 #விண்ணில் #இஸ்ரோ