இமாச்சலப்பிரதேசம் மாநிலம், சோலான் மாவட்டத்தில் உணவகம் இடிந்து விழுந்த விபத்தின் இடிபாடுகளில் இருந்து 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மலைப்பாங்கான பகுதியில அமைந்துள்ள பிரபலமான ‘தாபா’ எனப்படும் உணவகமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. இந்த தாபாவுக்கு அதிகளவான ராணுவ வீரர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அருகாமையில் உள்ள ராணுவ முகாமில் இருந்து பல ராணுவ வீரர்கள் சென்றிருந்த போதே உணவகம் அமைந்திருந்த 4 மாடி கட்டிடம் இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது
இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் உள்பட சுமார் 50 பேர் இடிபாடுகளில் சிக்கியதாக நேற்றிரவு தகவல் வெளியானதனையடுத்து அங்கு சென்ற மீட்புப்படையினர் நேற்றிரவு இரு சடலங்கள் மற்றும் சுமார் 20 பேரை உயிருடன் மீட்டிருந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்றைய நிலவரப்படி 12 ராணுவத்தினர் உள்பட 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் படுகாயங்களுடன் 28 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #இமாச்சல #உணவகம் #விபத்து #சடலங்கள் #மீட்பு #தாபா