கிளிநொச்சி பரந்தன் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் ஒருவர் தனது காணியை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில் காணியை பெற்றுத் தருமாறு கோரி காணி உரிமையாளர் கவனயீர்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் வாக்குறுதி வழங்கியதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம அலுவலர் பிரிவுப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றை தென் பகுதியில் இருந்து வந்த ஒருவரும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் ஒருவரும் அத்து மீறி ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோரிடம் முறையிட்டும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் வெளியேற மறுத்து அத்து மீpறி குடியிருந்து வருகின்றனர்.இந்தநிலையில் ; தமது காணியை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி இன்று (16-07-2019) பகல் காணி உரிமையாளரான குறித்து பெண் தனது காணிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்
இதனையத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சிக் காவல்துறையினர் இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு காணி உரிமையாளர் அவரது காணிக்குள் குடியிருக்குமாறும் அவ்வாறு அத்துமீறி குடியிருப்பவர்கள்; உரிய ஆவணங்கள் இன்றி குடியிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்
வெளிமாவட்டத்தில் இருந்து எந்தவித பதிவுகளுமின்றி தங்கியிருக்கும் இவர்கள் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி பல பெண்களை அழைத்துவந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது
இதேவேளை குறித்த காணியில் இருந்து வெளியேறுமாறு பிரதேச செயலகத்தால் பல தடவைகள் கடிதங்கள் அனுப்பப்பட்டு கொண்டமையும் குறிப்பிடத்தக்கது- #கிளிநொச்சி #சிவில் பாதுகாப்பு திணைக்கள #காணி #ஆக்கிரமித்தமை #உரிமையாளர் #போராட்டம்