இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் இம்முறை உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத்தில் அதிக கோல்களைப் பெற்ற வீராங்கனை எனும் சாதனையை தனதாக்கினார். இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் தர்ஜினி சிவலிங்கம் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
போட்டியை 88-50 எனும் கோல் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிகொண்டது. இலங்கை அணி பெற்ற 88 கோல்களில் 76 கோல்கள் தர்ஜினி சிவலிங்கத்தினால் போட்டிப்பட்டிருந்தது. இதற்கமைய, இம்முறை உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் தர்ஜினி சிவலிங்கம் போட்ட கோல்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்ததன் மூலம் உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரொன்றில் அதிக கோல்களைப் போட்ட வீராங்கனையாக அவர் பதிவாகியுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த சாதனையை தன்னகத்தே வைத்திருந்த சிம்பாப்வேயின் ஜொய்ஸ் டகய்ட்சாய் 125 கோல்களைப் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #தர்ஜினி சிவலிங்கம் #சாதனை #இலங்கை அணி #வலைப்பந்தாட்ட #உலகக்கிண்ண