மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பு
வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன் கிழமை (17) காலை ஏற்பாடு செய்யப்பட்ட வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பு இடம் பெற்றது. குறித்த மக்கள் சந்திப்பின் போது வடமாகாணத்தைச் சேர்ந்த அரச திணைக்களங்களின் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் , அமைச்சுக்களின் செயலாளர்கள் வருகை தந்திருந்தனர்.
இதன் போது குறித்த சந்திப்பில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும்,தீர்வை பெற்றுக்கொள்ள நூற்றுக்கனக்காணவர்கள் வருகை தந்திருந்தனர்.
வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் மாவட்டச் செயலகத்தில் கடந்த 3 ஆம் திகதி (3-07-2019) காலை வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
குறித்த சந்திப்பில் ஏராளமான பொது மக்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.குறித்த சந்திப்பில் வடமாகாண ஆளுநர் உற்பட பொறுப்பு வாய்ந்த சில அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.இதனால் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையிலே குறித்த மக்கள் சந்திப்பு மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
இதே வேளை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அசராங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் அடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு இடம் பெற்றது.குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச நியமனங்களை பெற்றுக்கொள்ளும் அனைவரும் தமது கடமைகளை சரியாக செய்ய வேண்டும்- மன்னாரில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன்
அரச உத்தியோகஸ்திற்கு விண்ணப்பம் செய்து தேர்வு பெற்று நியமனம் பெற்ற யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களுக்காக அந்த நியமனத்தை பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தில் இனிமேல் குறித்த நபர் 7 வருடங்களுக்கு வேறு ஒரு அரச உத்தியோகத்தை பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
வடமாகாண ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 77 அரச உத்தியோகத்தர்களுக்கான நிறந்தர நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று புதன் கிழமை(17) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது தகவல் தொழில் நுற்ப உத்தியோகத்தர் 9 பேரூக்கும்,கலாச்சார உத்தியோகத்தர் 3 பேரூக்கும், அபிவிருத்தி உத்தியோகத்தர் 65 பேர் உள்ளடங்களாக 77 அரச உத்தியோகத்தர்களுக்கான நிறந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,
அரச நியமனங்களை பெற்றுக்கொள்ளும் அனைவரும் தமது கடமைகளை சரியாக செய்ய வேண்டும். நியமானம் வழங்கி அடுத்த நாள் இடமாற்றம் கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்களுக்கு விரோதமான பணி என்ன என்றால் நியமானம் வழங்கும் இடத்திற்கு செல்லாமல் இருப்பது. சுமார் ஒரு மாத காலம் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் குறித்த நியமனத்தை எடுத்தவர் சுகயீனம் காரணமாக அல்லது வேறு ஒரு காரணத்திற்காக வராமல் இருக்கின்றார்?என. கடிதம் அனுப்பி ஒன்றரை மாத காலம் போனதன் பின்னரே எமக்கு தெரிய வரும் குறித்த நபர் அந்த நியமனத்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று.
அந்த ஒன்றரை மாத காலம் உங்களுடைய நேர்முகப்பரிட்சையினை செய்து அதனை பரிட்சித்து உத்தியோகஸ்தர்கள் எல்ல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு எடுத்த அந்த தீர்மானத்தை நீங்கள் உதாசீனம் செய்து போகாமல் நிற்பீர்கள். போகாமல் நிற்கும் போது கூட உரிய முறையில் தெரியப்படுத்துவது இல்லை. நாங்கள் தான் கண்டு பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சேவை செய்ய வேண்டிய மக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலை ஏற்படும்.இந்த நிலையில் வடமாகாணத்தில் நான் கட்டாயமான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளேன்.
அரச உத்தியோகத்திற்கு விண்ணப்பம் செய்து தேர்வு பெற்று நியமனம் பெற்ற யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களுக்காக அந்த நியமனத்தை பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தில் இனிமேல் குறித்த நபர் 7 வருடங்களுக்கு வேறு ஒரு அரச உத்தியோகத்தை பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவருடைய பெயர் விபரங்கள் கருப்பு பட்டியலில் பதியப்படும்.
அப்படிப்பட்டவர்கள் அரசிற்கு விரோதமாக செய்கின்ற நடவடிக்கைகளாக கருதப்படும். நியமனம் கிடைக்கப்பெற்ற இடத்திற்கு ஒரு வருடமாவது போகாமல் தமக்கு தேவையான இடத்திற்கு மட்டும் தான் போவோம் என்று அடம்பிடிப்பவர்களும் உள்ளனர்.
இனி வரும் காலங்களில் இவ்வாறு நடக்குமாக இருந்தால் வேறு மாவட்டங்களில் இருந்து நியமிக்கப்பட்டு வெற்றிடங்களை பூர்த்தி செய்ய எல்லா அதிகாரமும் எம்மிடம் உள்ளது.மக்களுக்கான சேவையே முக்கியம்.ஏற்றுக்கொள்ளக்கூடிய சில காரணங்கள் மனிதாவிமான ரீதியில் உள்ளது.
அந்த காரணங்களை நாங்கள் ஆலோசனைக்கு அமைவாக ஏற்றுக்கொள்ளுவதை தவிர உங்களுக்கு வழங்கப்படுகின்ற நியமான இடங்களுக்கு சென்று கடமையை பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அசராங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் அடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு இடம் பெற்றது.குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலந்துகொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன் கிழமை (17) காலை ஏற்பாடு செய்யப்பட்ட வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பு இடம் பெற்றது.
குறித்த மக்கள் சந்திப்பின் போது வடமாகாணத்தைச் சேர்ந்த அரச திணைக்களங்களின் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் , அமைச்சுக்களின் செயலாளர்கள் வருகை தந்திருந்தனர்.இதன் போது குறித்த சந்திப்பில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.