இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர், துடுப்பாட்டப் பயிற்சியாளர், பந்துவீச்சுப் பயிற்சியாளர், களத்தடுப்புப் பயிற்சியாளர், பௌதிகவியல் நிபுணர் , உடற்கூற்று நிபுணர், நிர்வாக முகாமையாளர் பதவிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விளம்பரம் செய்துள்ளது
அந்தவகையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணமே இந்தியாவின் தற்போதைய தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி, உதவிப் பயிற்றுவிப்பாளர் சஞ்சய் பங்கர், பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் பாரத் அருண், களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். ஸ்ரீதருக்கர் ஆகியோருக்கான இறுதித் தொடராக அமையவுள்ளது.
உலகக் கிண்ணமே இந்த பயிற்றுவிப்பாளர் குழுவின் இறுதித் தொடர் என்றபோதும், மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம் வரை அவர்களின் பதவிக்காலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நீடித்திருந்தது.
இந்நிலையில், பயிற்றுவிப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி இம்மாதம் 30ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணபிப்பவர் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டுமென்பதுடன், அவர் குறைந்தது 30 டெஸ்ட்கள் அல்லது 5050 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் குழு நியமிக்கப்படவுள்ளது # பயிற்சியாளர் குழு #கிரிக்கெட்