இந்த ஆண்டின் இதுவரையிலான காலத்தில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் பாலியல் பலாத்காரச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஜூலை 10ஆம் திகதி ஒப்புதல் அளித்திருந்தது.
நிர்பயா உள்ளிட்ட சட்டங்களும் பெண்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தச் செயற்பாட்டில் உள்ள நிலையில் இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக 550 வழக்குகள் தேசியப் பெண்கள் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், பிகார் ஆகிய மாநிலங்களில்தான் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2014, 2015 ஆண்டுகளில் தலா 11 வழக்குகளும், 2016ஆம் ஆண்டில் 24 வழக்குகளும், 2017, 2018 ஆண்டுகளில் தலா 21 வழக்குகளும் 2019ஆம் ஆண்டின் இதுவரையில் ஆறு வழக்குகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்மிருதி இரானி தெரிவித்தார். #பெண்களுக்கு #பாலியல் #வழக்குகள் #பதிவு #ஸ்மிருதி இரானி
1 comment
ஏங்க மத்திய கிழக்கு நாடுகளில் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் “பெண்களுக்கு எதிரான குற்றங்கள்” நடைபெறுவதில்லை. ஏன் அங்க எல்லாம் ஆண்களும் பெண்களும் வாழாமல் மிருகங்களா வாழ்கின்றன. முன்னுதாரணமாக நாலு பேருக்கு கழுத்தை Public ஆ வெட்டுங்க. நாலு இலட்சம் பேர் திருந்துவானுங்க. இந்த வெட்கம்கெட்ட நாய்களுக்கு ஒரு நீதி மன்றம், நீதிபதி, பல சட்டத்தரணிகள், எடுபிடிகள். தீர்ப்பு 2 மாதமோ மூனு மாதமோ. திரும்பி வந்தா பழைய குருடி கதவைத் திறடி என்ட புராணம்தான். இது எல்லாம் தேவையா. கொலைகாரனுக்கு திருடனுக்கு Trafickers கு இது எல்லாம் தேவைதான். இந்த நாய்களுக்கு இது ஒன்னும் தேவையில்லங்க. Public prove பண்ணிட்டா direct ஆ கழுத்தை அபேஸ் பண்ண வேண்டியதுதான்.