185
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இன்று அதிகாலை 4.24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்து அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை என்பதுடன் அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் நேற்று மதியமும் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந’தமை குறிப்பிடத்தக்கது. #அருணாச்சல # நிலநடுக்கம்
Spread the love