அமெரிக்காவின் பெரும்பாலான பகுதியில் மிகக் கடுமையான வெப்பமிகுந்த காலநிலை நிலவ ஆரம்பிக்கும் என்பதுடன இந்த வார இறுதியில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயோர்க், வோஷிங்டன், கிழக்கு கடற்கரையில் இருக்கும் போஸ்டன் மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வசிக்கும் 200 மில்லியன் மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், 38 டிகிரி செல்சியஸுக்கு நெருக்கமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ வெப்பம் பதிவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் அமெரிக்கா மட்டுமின்றி, கனடாவின் சில பகுதிகளும் வெப்ப அலையால் தாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது
அண்மைய ஆண்டுகளில், அடிக்கடி நிகழும் வெப்ப அலையை காலநிலை மாற்றத்தோடு ஒப்பிட்டுள்ள ஆய்வாளர்கள் புதிய தரவுகளின்படி, உலகளவில் பதிவான சராசரி வெப்பநிலை 16.4 செல்சியஸ் டிகிரியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டின் அதிக வெப்பம் ஜூன் மாதம் பதிவாகியுள்ளதாகவும் இந்த மாத தொடக்கத்தில், ஆர்க்டிக் பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்கா மாகாணமான அலாஸ்காவில் அதிக வெப்ப நிலை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #அமெரிக்கா #கடுமையான, #காலநிலை #நியூயோர்க் #வோஷிங்டன்