Home இலங்கை அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது தாக்குதல்

அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது தாக்குதல்

by admin

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் குழுவினர்   மீது முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் நபர்களினால் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (20) ஒலிவில் துறைமுக அதிகாரசபை  தங்குமிடம் பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்   கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் மற்றும் ஊடகமொன்றிற்கு செவ்வி வழங்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் உள்ளிட்ட குழுவினர் கலந்த கொண்டு அவர்கள்  தங்கி இருந்த குறித்த  இடத்தை நோக்கி மற்றுமொரு முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் என வந்தவர்களினால் திடீர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் காயங்கள் எதுவும் இன்றி தப்பியதுடன் அவரது வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு கடற்படையினர் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் போது அக்கரைப்பற்று காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவுகின்றது.

மேற்படி கூட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு எதிர்வரும் வாரங்களில் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன்  வருகை தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. #அப்துல்லா மஃறூப்  # தாக்குதல் #முஸ்லீம் காங்கிரஸ்

பாறுக் ஷிஹான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More