ஈரான் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ள பிரித்தானிய கொடி தாங்கிய எண்ணெய் கப்பலை விடுவிக்குமாறு பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹண்ட் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவமானது பிரித்தானியாவின் பாதுகாப்பு மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் சரக்கு போக்குவரத்து தொடர்பில் கடினமான கேள்விகளை எழுப்புகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டீனா இம்பேரோ என்னும் குறித்த எண்ணெய் கப்பலை கைப்பற்றியமை தொடர்பான புதிய காணொளியை ஈரான் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டதன் பின்னர் ஜெர்மி ஹ்ட் இதனை தெரிவித்துள்ளார்,
முன்னதாக வளைகுடாவில் தடுத்துவைக்கப்பட்ட பிரித்தானிய கொடி ஏந்திய கப்பலை ஈரான் விடுவிக்கவில்லை என்றால் தீவிரமான விளைவுகளை’ சந்திக்க வேண்டியிருக்கும் என ஜெரிமி ஹண்ட் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ஈரான் #தடுத்து #கப்பலை #பிரித்தானிய #கோரிக்கை #british #ஜெரமி ஹண்ட்